Monday, December 13, 2010

தேள்கடி

இங்கே நான் பேசபோகும் தேள்கடி, வாரமலர் துணுக்கு பகுதிலே வருகிற தேள்கடி அம்மா பற்றி இல்லை. (இது 1990 களில் வாரமலர் படித்தவர்களுக்கு தெரியும், சரி சுச்பென்ஸ் வேண்டாம் -நான்  டிஸ்கோ சாந்தி பத்தி பேசலே). இது நிஜமா நானும் என்னோட நண்பன் கட்டை மாப்பிளையும் வாங்கின தேள்கடி
பத்தி பேசபோறேன்.  பாரதியார் பல்கலையில் கல்வி கத்துகிட்டு இருந்தோம் அப்போ,  1997-98 நு வச்சுகொங்கோ, நாங்க தங்கி இருந்த விடுதியை சுத்தி புதர்கள், கடு தான், மருதமலை அடிவாரம், அப்போ அப்போ தண்ணிய தேடி யானைகள் தொண்டாமுத்தூர் வரத்தும் உண்டு. மழை காலங்களில் நெறிய பாம்பு, தேளு எல்லாம் வரது உண்டு. அதிலே சில வணங்காமுடிங்க தவளைய பிடிக்க வர சரைபாம்ப அடிச்சு ரோட்டுலே போட்டு பயத்தகூட்டுவணுக. எல்லாம் ஊட்டிலே இருந்து வந்த நம்ப மலைமக்கள் தான். கோவைக்கும் இவங்களுக்கும் நல்ல தொடர்பு, நல்ல டீ இலை வெலைக்குபோச்சுன்ன கார் எடுத்துட்டு சேரன் டவேர்ச்கு முடிவெட்ட வருவானுக.
எங்க தோழன் ஒருத்தன் பொறந்த நாள் அன்னைக்கு கொஞ்சமா சரக்கு அடிச்சுட்டு, ஹாஸ்டல் மெஸ் லே சாப்ட்டுட்டு பசங்க வெளிய வந்து, வரண்டாலே நின்னுகிட்டு பொகைபோட தயார் ஆனாங்க நம்ப பசங்க. 
நான், பிளாஸ்மா ராம்ஸ், செட்டி சரவணன், கட்டை மாப்பிள்ளை, வாத்தியார் ரமேஸ், பாலிடிக்ஸ் செங்கிஸ், சாமி, RTR, சண்முகம், எல்லோரும் நின்னுகிட்டு இருந்தோம். திடிர்னு என்னோட கால்லே எதோ
நெருப்பு கங்கு பட்ட மாதிரி சுட்டுச்சு, கலை உதறிட்டு பார்த்தா காலுக்கு கீழ ஒரு கருந்தேள் கெடந்துச்சு, குச்சி எடுத்து தள்ளி பார்த்தா செத்து கெடந்துச்சு. என்னை தேள் கடிச்சுடுசுனு, பசங்களுக்கு ஒரே சந்தோசம், ஆபத்பாந்தவன் அசோக் பைக்லே ஏத்திகிட்டு கல்வீரம்பட்டிலே இருக்கிற மந்திகிரவங்ககிட்டே கூட்டிடுபோயி மந்திரிச்சு ரூம்க்கு வந்து தூங்கிட்டேன். கட்டை மாப்பிள்ளை அடுத்த இரண்டு வாரத்துக்கு" டேய், நி எல்லாம் ஒரு ஆளாடா? தேளு உன்னை கடிச்சு செத்து போயிடுச்சு, பார்த்துடா, யாரையும் கொட்டிடதேனு ஒட்டிகிட்டே இருப்பான். 

இது நடந்து ரெண்டு மூணு வரம் கழிச்சு, எப்போவும் போல ராத்திரி போடறே ஊத்தாப்பம் சாப்ட்டுட்டு, வேலிய தாண்டி, ஆலமர பஸ் ஸ்டாப் லே இருக்ற தாத்தா கடைக்கு கல்லைமுட்டாய், வாழைபழம் சாப்பிட்ட பிளாஸ்மா ராமசாமியை சரிபண்ணி, நான், கட்டை மாப்பிளை, வாத்தியார் ரமேஷ், எல்லோரும் போனோம், திரும்பி வரும் போது
நம்ப கட்டை மாப்பிளை கால ஒரு கருந்தேள் கொட்டிடுச்சு, மறுபடியும், ஆபத்பண்டவன் அசோக் அவனே கூட்டிகிட்டு கல்வீரம்பளையம் போயி மந்திரிசுகிட்டு வந்து தூங்கிட்டான். அடுத்தநாள் கலையிலே பார்த்தா நம்ப கட்டை மாப்பிள்ளை காலு பூரி மாதிரி வீங்கி இருந்துச்சு, உடனே R.S.  புரத்திலே இருக்கிற நல்ல ஆசுபதிரிக்கி கூடிட்டுபோனோம், ஒரு மூணு நாள் வச்சு வைத்தியம் பார்த்து அவனே வீட்டுக்கு அனுப்பினாங்க, இப்போவும் நம்ப கட்டை மாப்பிள்ளை சொல்லுவான்,
ஏண்டா உன்னை கடிச்ச தேளு செத்துப்போச்சு, நீ எல்லாம் "ஒரு ஆளாடா?

ஹஹஹஹஹா, நம்ப கட்டை மாப்பிள்ளை இப்போ கொரியாலே பிசிக்ஸ் சொல்லிகொடுதுட்டு இருக்கான்.

2 comments:

  1. தமிழ்மணத்துல இணையுறது எப்பங்க?

    ReplyDelete
  2. Also you got to disable the word verification!

    ReplyDelete