வணக்கமுங்கோ... என்ர மொத எழுத்து, எழுத்துப்பிழை இருந்தா மன்னிச்சுகோங்க... பலமைபேசி அண்ணன்கிட்டே சரிசெஞ்சுகறேன்.
என்ர மேல்படிப்புக்காக ஜப்பான் அரசாங்கம் உதவித்தொகையோடு Ph.D இடமும் டோக்யோ பல்கலைகழகத்தில் கொடுத்து, கோவையில் இருந்து டோக்யோ வரை சென்னை-சிங்கப்பூர் வழியாக விமானசிட்டும் கொடுத்து வாங்கோ வந்கோனு கூப்டாங்க, சரி பாரதியார் பல்கலைகழகத்தில் பிடுங்கின ஆணி போதும்னுட்டு கெளம்பிட்டேன். இது நடந்தது 1999 லே. உடுமலைபேட்டையிலே இருந்து கூட்டமா கோவை விமானநிலையத்தை ஒருவழி பண்ணி என்னையே ஜெட் ஐர்வேச்லே ஏத்திவிட்டுட்டங்க. நானும் மிட்டாய் கொடுக்கும் பெண்ணை நல்ல பார்த்து பேசறதுக்கு முன்னாடி சென்னைலே ஏறக்கிவிட்டுட்டாங்க.
அப்புறம் இந்தியன் ஏர்லைன்ஸ்லே சிங்கப்பூர், கஷ்டப்பட்டு இருக்கை சந்துலே வந்த மிட்டாய் கொடுக்கற வடகூர் பொம்பளைகிட்டே திட்டு வாங்கி இரண்டு சரக்கு உட்டு முடிகறதுகுள்ளே சிங்கப்பூர் ஏறக்கிவிட்டுட்டாங்க. வண்ணான் ஆட்டுதலைக்கு அலையற மாதிரி சரக்கு எப்போகொடுபங்கன்னு கத்துகிட்டு இருந்தேன் அடுத்த கட்ட விமானத்தில். அழகு ஜப்பான் மிட்டாய் கொடுக்கற பொண்ணு அழகா சரக்கு கொடுத்துச்சு.
டோக்யோலே பொட்டிபடுக்கையே வாங்கிட்டு நம்பள கூட்டிகிட்டு போற நம்ப ஜப்பான்கார தோஸ்து, நீ இந்தியன் , ஏன் உந்தலையிலே டர்பன் இல்லைனு கேட்டான் பாருங்க. பட்டிகாட்டான் மிட்டாய் கடையே பார்த்த மாதிரி சப்பான் ட்ரைன் ஏறி, (4 முறை வேறு வேறு ட்ரைன் மாறி) எனக்கு ஒதுக்கப்பட்ட மாணவர் விடுதிக்கு கூட்டிபோனான். கொடுமைன்னு சொல்லகூடாது, நான் ஆறு அடி இரண்டு இன்ச் வளந்து கேட்டவன், எனக்கு ஒதுக்கப்பட்ட அறை 15 கு 10 அடி, அதுக்குள்ளேயே படுக்கை, சமையல், துணிமணி(மணி இனிமேல தான்) வைக்க அலமாரி பொட்டி, சமைக்க அடுப்பு, பத்திரம் கழுவ இடம், குளிச்சு ஒன்னுக்கு இரண்டுக்கு போறதுகுன்னு எல்லாத்தையும் அந்த ரூம்லேயே அடசுப்புட்டான், ஜப்பான்காரன் ஜப்பான்காரன் தான்.
பொட்டிய ரூம்லே வச்சுபுட்டு ஜப்பான் தோஸ்து கூட மறுபடியும் 3 ட்ரைன் ஏறிபல்கலைகழகம் போகணும்னு சொன்னான். அடபோங்கட ஜப்பான்காரனுக ட்ரைன்லேயே பாதி வாழ்நாளை தொலைக்கறானுகனு நெனச்சுட்டு அவன்கூடயே முன் ஏரு போன வழியிலே பின் ஏரு போறமாதிரி போனேன். 2 வது ட்ரைன் மாறும்போது அவன் பின்னாடியே ஜப்பான் குட்டிகளை பார்த்துகிட்டே எறங்கிட்டேன், ட்ரைன் போன பின்னாடிதான் என்னோட கடவுசீட்டு மற்றும் மற்ற கோப்புகள் வச்சிருந்த என்னோட மஞ்சபையை மறந்து விட்டுட்டேன்னு. நம்பளோட ஜப்பான் தோஸ்து உடனே ஸ்டேஷன் மாஸ்டர் கிட்டே ஓடிபோயி சொன்னான், அவரு இன்னும் 10 நிமிசத்துலே அதே ட்ரைன் பக்கத்துக்கு பிளாட்பர்ம்லே திரும்பி வரும்னு சொன்னாரு, சரி ஜப்பான் குட்டிகளை அப்புறம் பார்த்துக்கலாம்னு ட்ரைனுகு காத்து இருந்தோம். ட்ரைன் வந்துச்சு என்னோட மஞ்சப்பை அதே எடத்துலே இருந்துச்சு, அப்போ வந்துசுங்கோ ஜப்பான்காரன் மேலே ஒரு மரியாதையை, இன்னும் மாறவில்லை.
இன்னும் வர பதிவுகளிலே நான் பண்ணின லொள்ளுகளை எழுதறேன்.
வாங்க, வாங்க... நல்வரவு ஆகுக!
ReplyDeleteNHM Writer பாவிக்கப் பழகிக்குங்க!!
அடபோங்கட ஜப்பான்காரனுக ட்ரைன்லேயே பாதி வாழ்நாளை தொலைக்கறானுகனு நெனச்சுட்டு அவன்கூடயே முன் ஏரு போன வழியிலே பின் ஏரு போறமாதிரி போனேன்.
ReplyDelete....ஹா,ஹா,ஹா,ஹா,... ஜப்பானிய வாழ்க்கைக்கு கலக்கல் அறிமுகம். லொள்ளுகளை சீக்கிரம் சொல்லுங்க.
Welcome to the Blog World!
(Following) Best wishes!