Wednesday, December 8, 2010

ஜப்பானில் பல்பு


நாம்ப ஜப்பான் போன புதுசு, எதோ நமக்கு தெரிஞ்ச இங்கிலிபீசு, ஒன்னு இரண்டு ஜப்பான் வார்த்தைகளை வச்சுக்கிட்டு வாழ்க்கையே ஓட்டிகிட்டு இருந்தேன். நமக்கு தெரிஞ்ச சைகை மொழி அப்போ அப்போ கை கொடுத்துச்சு. ரயில்பயணகளில் பழகிய ஆணி அடிபவர்கள், ஆராய்ச்சி மாணவர்கள்  நட்புடன்  சந்தோசமாக ஈ ஓட்டிக்கிட்டு இருந்தேன். அப்படி ஒருநாள் மும்மரம ஈ அடிசுகிட்டு இருக்கையிலே, தொலைபேசி அடிச்சது, நாடோடி சான், உன்னக்கு போன் அப்படின்னு கூட ஈ அடிக்கற ஜப்பான்காரன் கூப்பிட்டான், எடுத்த காதில் தேன்.. கொங்கு தமிழில் எனக்கு தெரிந்த பாரதியார் பல்கலைகழக பேராசிரியர், இங்கே மூன்றுமாத ஆராய்சிக்கு வந்து இருப்பதாகவும், இரவு உணவுக்கு சந்திக்க முடியுமா என்று கேட்டார். உடனே சரின்னு சொல்லிட்டேன், ஓசி சாப்பாடு வாத்தியார் வாங்கிதறாரு வேண்டாம்னு சொன்ன அவரு கஷ்டபடுவரு.  அவரோட முகவரி வாங்கிட்டு, என்னோட GPS (அதுதங்கே,சிலந்திவலை மாதிரி இருக்கும்  டோக்யோ subway map),  இது இல்லேன்னா நான் அவ்வளவுதான். Shinjuku போறதுக்கு பதிலா Kichijoji போயிடுவேன். நம்ப எல்லாம் சிறுவாணி, திருமூர்த்திமலை தண்ணி குடிச்சு வளந்த தையிரியம் தான்.

ரயில் நிலையம் வந்து, வெளியே வந்து வாத்தியாருக்கு காத்துக்கிட்டுஇருந்தேன். நம்ப இந்தியன் வந்தியர் சொன்ன நேரத்துக்கு வரணும்னு சட்டமா என்ன? அவரு இன்னும் வரலே. நானும் சும்மா இருக்காமே, மேலயும் கீழையும் நடை போட்டுக்கிட்டு இருந்தேன். அப்போ அப்போ வர போற ஜப்பான் குட்டிகளை துண்டு போட்டுக்கிட்டு இருந்தேன். அவிங்கே யாரும் என்ன ஒரு பொருட்டகூட பக்கலேங்கறது அடுத்த விஷயம். ஆனா நான் நடைபோடறதை கீழ உக்காந்து பிச்சை எடுத்துகிட்டு இருந்த ஜப்பான்காரன் என்னையேவே பாத்துகிட்டு இருந்தான். ஜப்பான்லேயும் பிச்சைக்கரான்கள் இருங்காங்க. நான் நடைபோட்டுகிட்டு இருந்ததுக்கு பக்கத்துலே குச்சிமிட்டாய், பிஸ்கோத்து, சோடா, சிகரெட் விக்கர மெசினு வரிசையா இருந்துச்சு. கீழ உகந்து இருந்த பிச்சைக்காரன் எழுந்து என்முன்னடி வந்து நின்னான். நம்ப ஆறு அடி ரெண்டு இன்ச் உயரம், அவன் ஐந்து அடி தான், அதுனாலே தைரியமா அவனே பார்த்தேன். அவன் ஜப்பான் மொழியிலே எதோ நீளமா பேசினான், நான் அவன் பிச்சைதான் கேக்கறான்னு நினைச்சு, என்கிட்டே சில்லறை (எப்போ இருந்து இருக்கு) இல்லைன்னு என்னோட ரெண்டு கையையும் விரிச்சு காட்டினேன்.  அவன் கையிலே 110 Yen  வச்சான், நான் அந்த yen a  எண்ணி பாத்துட்டு அவன்கிடேயே திரும்ப கொடுத்துட்டு, என்தலைய வேகமா எடமும் வளமும் ஆட்டிட்டு, அந்த எடதே விட்டே ஓடிடேன். நம்ப உருவம் அப்படி இருந்து இருக்கு. 


இருந்தாலும் ஜப்பான் பிச்சைக்காரன் கூட நல்லவனாத்தான் இருக்கான், அப்படின்னு நினைச்சுகிட்டு, பல்ப வாங்கிட்டு வந்துட்டேன்

2 comments:

  1. இருந்தாலும் ஜப்பான் பிச்சைக்காரன் கூட நல்லவனாத்தான் இருக்கான், அப்படின்னு நினைச்சுகிட்டு, பல்ப வாங்கிட்டு வந்துட்டேன்


    .....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா... சும்மா நடந்ததற்கே காசு கிடைக்குதே. ஆஹா....

    ReplyDelete
  2. நன்றி சித்ரா, முதன்மையாக வந்து பாராட்டியமைக்கு. உங்கள் அனைவரின் ஊக்கம் ஒரு பூஸ்ட்.
    ஆனா ஒண்ணுங்க, நீங்க பிசிக்ஸ் பத்தாவதுக்கு மேல படிக்கலே, இல்லைனா நிங்களும் ஆராய்ச்சி பண்ணி Solomonku போட்டியா இருந்து இருபிங்க

    ReplyDelete