Monday, December 13, 2010

எளிமையாய்


பின்லாந்தில் இருக்கும் Rovio என்ற கம்ப்யூட்டர் விளையாட்டு தயாரிப்பு நிறுவனம் 2009  இல் "கோவகார பறவைகள்" - "Angry Birds"வெளிட்டது, தற்போது 10 மில்லியன் தடவை தரவிகக்கம் செய்யப்பட்டு இருக்கிறது, ஐ-போன், ஐ-பேடு, போன்றவற்றல. இது தவிர மற்ற இயக்கமுறைகளில் (கம்ப்யூட்டர் மற்றும் விளையாட்டு சாதனங்கள்) 50 மில்லியன் தரவியக்கம் செய்யப்பட்டு, பைத்தியகரதனமாக எல்லோரும் விளையாடுகின்றனர். இந்த பைத்தியம் இந்த வார இறுதியில் எனக்கும் 
தொற்றிகொண்டது. மிகவும் எளிய விளையாட்டு, நமக்கு நாமே சவால் விட்டுக்கொண்டு அதிக புள்ளிகளை பெறுவதும் அடுத்த கட்டத்துக்கு முன்னேறுவதும் தான் இலக்கு, கூடவே நிறைய விளையாண்டு வீட்டம்மா கிட்டே திட்டும் வாங்கிக்கொண்டு இருக்கிறேன். 

வெவ்வேறு கட்டமைப்புக்குள் ஒளிந்திருக்கும் பன்றிகளை கோவம் கொண்ட பறவைகளை உண்டிவில் உதவியுடன், சரியான கோணத்தில் செலுத்து கட்டமைப்பை தகர்த்து உள்ளே இருக்கும் பன்றிகளை குறைந்த பறவைகளை கொண்டு கொல்லவேண்டும். எல்லா ஒளிந்திருக்கும் பன்றிகளையும் கொன்றபிறகு அடுத்த கட்டத்துக்கு பதவிஉயர்வு. உபயோகபடுதாமல் இருக்கும் பறவைகளுக்கும், உடைத்த கட்டபைபிற்கும் ஏத்தமாதிரி புள்ளிகள் வழக்கபடும். ஒவ்வொரு கட்டத்திலும் சிறிது பெரியதுமானபன்றிகள் மரம, கண்ணாடி, இரும்பு, கன்கிரிடு, போன்றவற்றை பயன்படுத்து கட்டப்பட்டு இருக்கும் கட்டமைப்புகளும் மாறுபடும்.
அதேபோல, ஒவ்வொரு கட்டத்திலும் வேறு வேறு பறவைகள் நமக்கு கொடுக்கப்படும், சரியான கோணத்தில் பறவைகளை உண்டிவில் உதவியில் செலுத்து பன்றிகளை கொன்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறி போய்க்கொண்டே இருக்க வேண்டியதுதான். 

இஸ்ரேல் நாட்டு தொலைகாட்சி பன்றி மற்றும் இந்த பறவைகளை உருவகபடுத்தி, ஒரு நையாண்டி நிகழ்ச்சி வெளியிட்டு நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு "Peace Treaty Sketch"  என்று நாமகரணம் சூட்டி இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன் கும் நடந்த அமைதி பேச்சுவார்த்தைகளை நையாண்டி செய்தது இந்த நிகழ்ச்சி.

இவ்வளவு வருமானம், பிரபலம், மில்லியன் கணக்கானவர்கள் பின்பற்றுவதற்கு கரணம் "எளிமை".  என்னடா இவன் எளிமையை பற்றி மொக்கை போடனன்னு நிங்கள் நினைபதற்கு ஒருகாரணம் நேற்று நடந்தது.
அலைபேசியில்,பழமைபேசி மற்றும் நசெரயனுடன் பேசும் சந்தர்பம் கிடைத்தது. நசரேயன் அவர்களின் அறிவுரை, "எளிமையான கருத்துகளையும் எழுத்துகளையும் படிபதற்கே நிறையபேர் ப்ளாக் படிக்க வருகிறார்கள், அப்படி எழுதுவதே நிறைய மொய் கிடைக்கும் என்றார். இந்த கோவகார பறவைகளின் வெற்றியை பார்க்கும போது, அது எவள்ளவு உண்மை என்று தெரியும்.

சரி அடுத்த 2 மணிநேரம் பறவைகளை ஏவி பன்றிகளை கொன்று, வீட்டம்மா கிட்டே ஏச்சு வாங்க போறேன்... அப்போறோம் பார்போம்.




3 comments:

  1. "எளிமையான கருத்துகளையும் எழுத்துகளையும் படிபதற்கே நிறையபேர் ப்ளாக் படிக்க வருகிறார்கள், அப்படி எழுதுவதே நிறைய மொய் கிடைக்கும் என்றார். இந்த கோவகார பறவைகளின் வெற்றியை பார்க்கும போது, அது எவள்ளவு உண்மை என்று தெயர்யும்.


    ......Very good tip. சூப்பர். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நன்றி சித்ரா, உங்கள் பின்னுட்டங்கள் எனக்கு மேலும் எழுத ஒரு தூண்டுகோல். நன்றி

    ReplyDelete
  3. இன்னும் நிறைய எழுதுங்க...

    ReplyDelete