Thursday, December 9, 2010

விருவிரு மாண்டி விருமாண்டி..

ஜப்பானில் இப்போதும் கிரிக்கெட் நல்ல பிரபலம், இந்திய, பாகிஸ்தான், ஸ்ரீலங்கா, இங்கிலாந்து, மற்றும் ஜப்பானியர்கள் தங்களுகென்று ஒரு டீம் உருவாக்கி டோக்கியோ கிரிக்கெட் league ஏற்படுத்தி விளயண்டுவருகின்றன.
கிரிக்கெட்ட விட நம்ப தலைவர் ரஜினிய தெரிஞ்ச ஜப்பான்காரன்  அதிகம், அடுத்தது மீனா.   நான் இந்தியன் engineers cricket club லே சேர்ந்து விளையாடிகிட்டு இருந்தேன். துவக்க பந்துவிசுவேன், அப்போறோம் கடைசிய போயி கட்டு சுத்து சுத்தி பந்தா மட்டயிலே பட்டு போச்சுன ரன் எடுப்பேன். அப்போ அப்போ மட்டையிலே நல்ல எடத்துலேஅதுவா பட்டு 4, 6 போகறது உண்டு. நம்ப பெருமைய இந்த லின்க்ல போயி பாருங்கோ( அப்போ நடோடியோட பேரு ஜெயகுமார்)


டோக்யோலே இடப்ற்றகுறை பற்றி எல்லோருக்கும் தெரியும், இதுலே கிரிக்கெட் மேட்ச் விளையடனும் என்றால் இரண்டு ட்ரெயின் இரண்டு பஸ் மாறி போகணும், பிரிட்டிஷ் எம்பசி கிளப்லே அருமையான கிரிக்கெட் கிரௌண்ட் இருக்கு, என்ன ஒரே பிரச்னை, 80 யார்ட்ஸ் தண்டி 50 அடி தடுப்பு ஸ்க்ரீன் தண்டி 6  அடிச்சா மட்டைஆடிபவர் அவுட். நல்ல கவனிக்கவும் மட்டை அடிக்கறது, மட்டை ஆகறது இல்லை.  நம்ப யூசுப் பதான் எல்லாம் ஒரே பால், அவுட் ஆகிடலாம். டிராவிட் மாதிரி ஆளுக அவுட் ஆகம ரொம்பநேரம் விளையாடலாம். சரி மொக்கை போதும் விஷயத்துக்கு வரேன்.

மட்டை, குச்சி, பந்து, கால்க்காப்பு, கைகாப்பு, இன்னும் வேறே சில காப்புகளை எடுத்துட்டு, மூணு ட்ரெயின் ஏறி, அப்றோம் ஒரு பஸ் மாறி,  கிரௌண்டுகு போயி, டாஸ் தோத்து,  எதிரணி பாகிஸ்தான் பயலுவ எங்களை  மொதல்ல மட்டை அடிக்க சொன்னணுக.

ஒருநிமிஷம், இந்த பாகிஸ்தான் காரங்களை பத்தி ரெண்டு வரி சொல்லிக்கறேன். ஜப்பானுக்கு எப்படியோ பிசினஸ் விசாவுளே வந்து இங்கேயே டயர போட்டு உக்காந்து ஜப்பன்காரன்களை ஆட்டய போட்டுட்டு இருக்கானுக . அப்போறோம் ஒரு ஜப்பான் குட்டிக்கு துண்டபோட்டு
லீகல் ஆகிடராணுக. இந்த ஜப்பான் குட்டிக பர்தா போட்டுட்டு அவனுக பின்னாடி அலையுதுக. எல்லாம் காலகொடுமை சார். அப்படி என்ன தொழில் பண்ணரனுகனா, எடுபிடி, அகிஹாபார என்கிற ஏலேக்ட்ரோநிக்ஸ் சந்தகடையிலே எடுபிடி, டாக்ஸி ஓட்டறது, பழைய கார் வாங்கி துபாய் அரபுகளுக்கு விக்கறது, இப்படித்தான்.

சரி, மேட்டருக்கு வரேன், அடிச்சு பிடிச்சு 35 ஓவர்லே 180 சொச்சம் ரன் எடுத்து, மத்தியானம் பிச்சா உண்ணு போட்டு, தடுபட்டம் ஆட போனோம். விதி அங்கேதான் எனக்கு விளையாடியது.  நானும் என்னோட ஒபெனிங் பௌலிங் சகலையும் எங்களோட 5 ஓவர் ஸ்பெல் முடிச்சவோடனே, ஒரு மொக்கை ஸ்பின் பௌலர் வந்தாரு, நம்ப தலைவரு ஸ்பின் போடபோறேன்னு லட்டு மாதிரி தூக்கி  தூக்கி போடுவாரு, அப்போ அப்போ எதாவது இளிச்சவாயன் அவுட் ஆவான், நம்ப பாகிஸ்தான் காட்டனுகளுக்கு ஸ்பின் வந்தாலே குஷி ஆகிடுவணுக, அடி பின்னிடுவணுக. சாம்பார, இட்லி, தயிர்சாதம் உங்கரே நாம, எல்லாம் அவனுக மாட்டுக்கறி திங்கறது  தான்   காரணம்னு மனச தேத்திகுவோம்.
நம்ப ஸ்பின் தலைவர் கும்ப்ளே மாதிரி கைய அப்படி இப்படிஆட்டி   பீல்டிங் செட் பண்ணினாரு, என்ன கூப்டு, நாடோடி, நீ நல்ல விழுந்து கிளுந்து பந்த புடிப்பே, அதேமாதிரி காட்ச் வந்தாலும் விடமாட்டே, அதுனால லெக் அம்பயர் கிட்டேபோயி நில்லுனாறு, அங்கே ஸ்வீப் ஆடி மிஸ் ஆன  காட்ச் வரும், சரி, ஈசியான இடம்னு போயி  நின்னேன். படுபாவி, மொத பந்தே
புல்டாஸ் போட்டான், நம்ப பாகிஸ்தான் காட்டான் ஓங்கி அடிச்சான், அது கேட்சா, தரையோட ஒட்டி வந்துசு, நம்ப மனசுலத்தான் யுவராஜ், ஜான்டி ரோட்ஸ்அப்படின்னு எல்லோரும் ஏத்தி விட்டதுலே, ஒரு டைவ் அடிச்சு காட்ச்  புடிக்க போனேன், பந்து கையிலே இருந்து எகிறி விழுந்துடுச்சு, கையிலே ஒரே வலி, எழுந்து பார்த்தா, இடது கை எல்லாம் ஒரே நத்தம், நன் போட்டு இருக்கற வெள்ளை சொக்க எல்லாம் சிகப்பு ஆகிடுச்சு.
என்னன்னுதான் பார்த்தா, ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் நடுவுலே இருக்கிற இடம் கிழிஞ்சு நத்தம் ஒழுகுது. எதிரணி லே பெஞ்சு தொடைக்கறவன் ஒருத்தன என்கூட கூப்பிட்டுகிட்டு, பக்கத்துலே இருந்த அவசர சிகிச்சை ஆசுபத்திரிக்கு போனோம். மறுபடியும், இந்த பாகிஸ்தான் காட்டணுக எப்படித்தான் ஜப்பான் மொழி சிக்கிரம் காத்துக்கான்னு தெரியலே,  அதே மாதிரி ஜப்பான் குட்டிகளுக்கு துண்டுபோட்டு பர்தா போடவைக்கரதிலையும் கில்லாடிக.


ஆசுபத்திரி வாசலிலே ஜப்பான் பெருசு ஒண்ணு வீல்சேரில் உக்காந்துட்டு புகைபோட்டுகிட்டு இருந்தாரு, எங்களை பார்த்தும் அந்த பெருசு,

என்ன ஆச்சு"

கிரிக்கேட்லே பந்துபிடிகும்போது அடி பட்டிடுச்சு...

கிரிக்கெட்ணா  என்ன?

உங்க ஊரு பேஸ்பால் மாதிரி, ஆனா, வெறும் கையிலே பந்து பிடிக்கணும், கைகாப்பு போட்டு ஏமாத்தகூடாது...

அப்போ பந்து மெத்துன்னு இருக்குமா?

இல்லை பேஸ்பால் மாதிரி அதே சைசுலே அதைவிட கெட்டியா இருக்கும்.

அப்ப்றோம் ஏன் கைகாப்பு இல்லாம பிடிக்கற?

ஐயா, வலிக்குது போதும் அழுதுடுவேன்...

சரி சரி கவலை படாதே, எனக்கு இரண்டாம் உலகப்போரில் ரெண்டு குண்டு என்முதுகுலே பாஞ்சுது, அதுலே ஒண்ணே எடுத்துட்டணுக, இன்னும் ஒண்ணு உள்ளேதான் இருக்கு, இது எல்லாம் ஜுஜுபி

அய்யா உங்க வயசு என்ன

இம்ம் 86  இருக்கும்


அய்யா சாமி உங்க வீரத்துக்கு ஒரு வீரவணக்கம், நான்  போயிட்டுவரேன், வலிக்குது.... , நாங்க எல்லாம் கைப்புள்ள ரேஞ்சு அப்படினு சொல்லிடு எடத்த காலி பண்ணிட்டு உள்ளே போயிட்டோம்

இரண்டாம் உலகப்போருக்கு அப்புறம் ஜப்பன்காரன்களோட ஆக்ரோஷம் ரொம்பவேகொறஞ்சு போச்சு... அதே மாதிரி சுபாஷ் சந்திரபோஸ் மேலே அவங்களுக்கு நிறைய மதிப்பும் மரியாதையும் இருக்கு, இதை எல்லா இந்தியன் மேலயும் காட்டுறாங்க...

இன்னொன்னும் சொல்லுவாங்க 'அத்தமகே ஈ தேசுன!! அப்படினா நீங்க

எல்லாம் மண்டகாரனுகனு அர்த்தம. .

அதுக்கு அப்றோம் கையே சுத்தம் பண்ணி, 14 தையல் போட்டு அனுப்பிடணுக,  ரெண்டு வாரம் கட்டோட லொள்ள பண்ணாம இருந்தேன்...

2 comments:

  1. இன்னொன்னும் சொல்லுவாங்க 'அத்தமகே ஈ தேசுன!! அப்படினா நீங்க எல்லாம் மண்டகாரனுகனு அர்த்தம. .


    ..... அஸ்க்கு புஸ்க்கு - இதை நம்பி, நாங்க யார்க்கிட்டயாவது சொல்லி அப்புறம் அதே மருத்துவமனைக்கு எங்களையும் அனுப்பி வைக்கவா? ஆளை விடுங்க, சாமி!

    ReplyDelete